தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது விழுந்த கிரேன் : 22 பேர் பலி!
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகோன் ராட்சசிமா மாகாணத்தின் (Nakhon) சீக்கியோ (Sikhio) மாவட்டத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது மீட்பு பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
சீக்கியோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அதிவேக சாலை அமைக்கும் திட்டத்தில் இந்த கிரேன் பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





