அமெரிக்காவுடன் ஏற்பட்ட விரிசல் – சீனாவுடன் கைகோர்க்கும் கனடா!
கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) , ஆழமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்காக சீனாவிற்கு 04 நாள் பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் கனடா தனது சர்வசேத உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முக்கிய பகுதி சீனாவுடன் உறவுகளை புதுப்பிப்பதாகும்.
இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு “புதிய மூலோபாய கூட்டாண்மையை” முன்மொழிவார் எனக் கூறப்படுகிறது.
விவசாயம், எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்த கூட்டாண்மை வரலாற்று சிறப்புமிக்க ஆதாயங்களை” ஈட்டக்கூடும் என கார்னி குறிப்பிட்டுள்ளார்.
கார்னியின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ள சீன ஜனாதிபதி சீன-கனடா உறவுகள் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு பயனளிக்கின்றன எனக் கூறியுள்ளார்.
இதேவேளை ஏறக்குறைய ஒரு தசாப்த காலப்பகுதியில் கனேடிய தலைவர் ஒருவர் சீனாவிற்கு பயணிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.





