ஐரோப்பா – அமெரிக்க உறவில் ஏற்பட்ட விரிசல் : மார்கோ ரூபியோ கருத்து!
சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான உறவில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த கால மேற்கத்திய தவறுகளை விமர்சித்தார்.
“விதிகள் சார்ந்த உலகளாவிய ஒழுங்கை மாயை என விமர்சித்த அவர், உலகளாவிய விடயங்களை அணுகுவதில் ஐ.நா தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா தீவிரத்தன்மை மற்றும் பரஸ்பரத்தை எதிர்பார்க்கிறது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இதேவேளை உக்ரைனுக்கான நட்பு நாடுகளின் கலந்துரையாடல் கூட்டத்தில், ரூபியோ கலந்துகொள்ளாதது ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.




