மனிதர்களுக்கு முன் விலங்குகள் மத்தியில் வேகமாக பரவிய கொவிட் வைரஸ்!

உலகளாவிய ரீதியில் 7 மில்லியன் உயிர்களையும், இங்கிலாந்தில் 200,000 க்கும் அதிகமான உயிர்களையும் பலிகொண்ட தொற்றுநோயின் மூலத்தைப் பற்றிய விவாதம் பொங்கி எழுகிறது.
மாற்றுக் கோட்பாடு என்னவென்றால், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் உள்ள ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து கசிவு காரணமாக தொற்றுநோய் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
ஆனால் விஞ்ஞானிகள் கோவிட் தொற்றுநோயின் உண்மையான தோற்றத்தை கண்டுபிடித்ததாக நம்புகிறார்கள். மேலும் ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தது என்ற ஊகத்தை நிராகரித்துள்ளனர்.
வைரஸ் ஒரு விஞ்ஞான பரிசோதனையில் இல்லாமல் சீனாவின் வுஹானில் உள்ள ‘ஈரமான சந்தையில்’ இருந்து கசிந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் 2019 இல் வுஹான் சந்தைக் கடைகளில் விற்கப்பட்ட விலங்குகளின் மரபணு மாதிரிகளை சோதித்து, சில உயிரினங்களில் கோவிட் வைரஸின் தடயங்களைக் கண்டறிந்தனர்.
மனிதர்களுக்குப் பரவுவதற்குக் காரணமான விலங்குகளை விஞ்ஞானிகள் துல்லியமாகக் கண்டறிவது இதுவே முதல் முறை என்று அவர்கள் வாதிடுகின்றனர். 2019 நவம்பர் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை குறித்த வைரஸானது சந்தை பகுதிகளிலேயே அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக ரக்கூன் வகை நாய்கள், மூங்கில் எலிகள் மற்றும் மலாயன் முள்ளம்பன்றிகள் போன்ற பிற விலங்குகளும் கொவிட் பரவுவதற்கு ஏதுவான தன்மைகளை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் சீன சுகாதாரக் குழு வருவதற்கு முன்பே பல முக்கிய விலங்கு இனங்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதால் இது ஒரு உறுதியான பட்டியல் அல்ல என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் புளோரன்ஸ் டெபாரே கூறியுள்ளார்.