கொவிட் தடுப்பூசியால் குழந்தைகளுக்கு இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்!
கொவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை ஆறு மடங்கு அதிகரிப்பதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
ஃபைசர் (Pfizer) கொவிட் தடுப்பூசி போடப்பட்ட முதல் வாரத்தில் குழந்தைகளுக்கு இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 06 மடங்கு அதிகரித்துள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசி நீண்டகால நலனிற்கு துணைப்புரிந்ததாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மில்லியன் கணக்கான குழந்தைகளின் தொற்றுநோய் சுகாதார பதிவுகளை ஆய்வு செய்த பிரிட்டிஷ் நிபுணர்கள் தடுப்பூசி போட்ட உடனேயே மயோர்கார்டிடிஸ் (myocarditis) அல்லது பெரிகார்டிடிஸ் (pericarditis) இதய வீக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில், தடுப்பூசி போட்ட முதல் வாரத்தில் இதயப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து வழக்கமாக எதிர்பார்க்கப்படுவதை விட 11 மடங்கு அதிகமாக இருந்தது.
இருப்பினும், கோவிட் தொற்றுடன் ஒப்பிடும்போது, அடுத்த ஆறு மாதங்களில் இதயப் பிரச்சினைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.





