தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தவறான பரிந்துரைகளை வழங்குவதையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)