பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகள் – கடும் கோபத்தில் டிரம்ப்
பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதற்கு பல நாடு நடவடிக்கை எடுத்துள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார்.
இது ஹமாஸ் அமைப்பினரின் மோசமான செயல்களுக்குக் கிடைக்கும், வெகுமதியாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 80 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில், உரையாற்றும் போது ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார்.
அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் அமைப்பினரால், கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்யக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையிலேயே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





