ஐரோப்பா செய்தி

வட லண்டனில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான வாகனங்கள் தீக்கிரை – அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் கடும் கண்டனம்

வட லண்டன் பகுதியில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதைத்
தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியா யூத எதிர்ப்பை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை வார்த்தைகளிலும் செயல்களிலும்
தெளிவுபடுத்த வேண்டும் என கன்சர்வவேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் தெரிவித்துள்ளார்.

கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் வாழும் மக்கள் தாக்குதல்களால் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan), இந்தச் சம்பவத்தை யூத சமூகத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான
தாக்குதல் எனக் குறிப்பிட்டு, இத்தகைய வெறுப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு லண்டன்வாசிகள் இடமளிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் கூட இலக்கு வைக்கப்பட்டிருப்பது மிகவும் அருவருப்பானது என யூத தலைமை மன்றம் ,
கூறியுள்ளது.

அண்மை காலமாக யூத மக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துள்ளதாகவும் யூத தலைமை மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் மன்றத் தலைவர் டாம் டால்பின் (Tom Dolphin), யூத-எதிர்ப்பை வெறுக்கத்தக்கதுஎன்றும்,
சுகாதார சேவைகள் (Healthcare Services) மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!