கூலி படத்தில் சிவகார்த்திகேயன்… லோகேஷ் வைத்த ட்விஸ்ட்

கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் இளமை தோற்றத்தில் நடிப்பதாக சொல்கின்றனர்.
ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் ரஜினி கண்டிப்பாக இதற்கு சம்மதிக்க மாட்டார்.
ஆகையால் சிவகார்த்திகேயன் கூலி படத்தில் பாடல் வரிகள் எழுதி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இல்லையென்றால் ஏதாவது சில காட்சிகளில் குரல் கொடுத்து கூடும். இதனால் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இருப்பது கிட்டத்தட்ட உறுதியான செய்தி தான்.
ஆனால் அதில் எவ்வாறு பங்களித்திருக்கிறார் என்பது படம் வெளியானால் தெரியவரும்.
இப்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் பராசக்தி மற்றும் மதராசி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
ஆகையால் விஜய்யின் மார்க்கெட்டை உடைத்து சிவகார்த்திகேயனை தூக்கிவிட வேண்டிய நேரம் இது. ஆகையால் லோகேஷ் சிவகார்த்திகேயனுக்கு இவ்வாறு செய்திருக்கிறார். மேலும் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி உள்ளது.