சவுதி அரேபியாவின் எல்லைப் பாதுகாப்பு குறித்து சர்ச்சை!! குடியேற்றவாசிகள் கொன்று குவிப்பு
சவூதி அரேபியா தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகம் சர்ச்சைக்குரிய கண்டுபிடிப்பை செய்துள்ளது.
சவூதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்தியதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, ஏமன் ஊடாக தமது நாட்டிற்குள் நுழைய முயன்ற எத்தியோப்பிய குடியேற்றவாசிகள் மீது சவூதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்வாறான ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சவூதி அரேபியா நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய குடியேற்றவாசிகளை இவ்வாறு கொன்றுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா பலகோடி பணத்தை செலவழித்து சர்வதேச சமூகத்தின் முன் தனது பிம்பத்தை வளர்த்துக்கொண்டாலும் இவ்வாறான சம்பவங்களை அலட்சியம் செய்யக்கூடாது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சவூதி அரேபியா இதுவரை பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படையினரின் பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் சிறிய ஆயுதத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 430 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தியது.