சீனா உருவாக்கியுள்ள மைக்ரோவேவ் ஆயுதம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
சீனா உருவாக்கியுள்ள புதிய மைக்ரோவேவ் (microwave) ஆயுதம் அமெரிக்காவின் ஆயுதத்தை விட சக்திவாய்ந்தது என்றும், மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது எனவும் அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் இந்த ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனை உருவாக்கிய நபர், இந்த ஆயுதமானது குறுகிய தூரப் பாதுகாப்பைத் தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது சுயாதீனமாக இயங்கவோ அல்லது அடுக்கு ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பில் லேசர்கள் மற்றும் வழக்கமான பீரங்கிகளுடன் நெட்வொர்க் செய்யவோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சீனா நோர்த் இண்டஸ்ட்ரீஸ் குரூப் கார்ப்பரேஷனின் (நோரின்கோ) நிபுணர் யூ ஜியான்ஜுன் (Yu Jianjun) தெரிவித்தார்.
இருப்பினும் முன்னதாக வெனிசுலாவிற்கு வழங்கப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி புதிய ஆயுதம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.





