விளையாட்டு

தொடரும் தோல்வி: திண்டாடுகிறது இலங்கை அணி!

இங்கிலாந்து England அணியிடம் T20 தொடரையும் இழந்து தவிக்கின்றது இலங்கை Sri Lankan கிரிக்கெட் அணி.

மூன்றாவது T20 போட்டி நாளை (3) நடக்கவுள்ள நிலையில், ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ODI 2-1 என கைப்பற்றி அசத்தியது.

அதன்பின்னர் நடைபெற்ற முதல் T20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது T20 போட்டி கண்டி பல்லேகலேயில் நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த் லெவிஸ் D/L முறைப்படி 17 ஓவரில் 168 ஓட்டங்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து T20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

மூன்றாவது T20 போட்டி இலங்கை நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!