அமெரிக்காவுடன் சேர கிரீன்லாந்து வாசிகளுக்கு வெகுமதி அளிக்க பரிசீலனை!
கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு எதிராக அந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள், எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பலர் இரு நாடுகளிடமிருந்தும் சுதந்திரம் பெற விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிரீன்லாந்தை கைப்பற்றியே தீருவோம் என குறிப்பிட்டுள்ள நிலையில் அவ் மக்களின் கருத்துக்கள் வந்துள்ளன.
இதற்கிடையில் அமெரிக்காவில் சேர ஒப்புக்கொள்ளும் கிரீன்லாந்துவாசிகளுக்கு $100,000 உதவித்தொகை வழங்கும் யோசனையும் பரிசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கிரீன்லாந்துவாசிகள் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.





