ஜேர்மன் தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி!

நடந்து முடிந்த ஜேர்மன் தேர்தலில், பழமைவாத கட்சி 28 தசம் 6 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜேர்மன் அரசியல் சட்டத்தின் கீழ், கட்சியின் தலைவர் பிரட்ரிக் மேர்ஸ் (Friedrich Merz) எதிர்வரும் 8 வார காலப்பகுதியில் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியின் தீவிர வலதுசாரி தரப்பினர் 20.8 சதவீதத்தினை பெற்று 2வது நிலையில் உள்ளது.
இருப்பினும் வெற்றி பெற்றுள்ள பழமைவாத கட்சி தீவிர வலதுசாரியுடன் இணைந்து பணியாற்றுவது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்சினின் (Olaf Scholz) ஜனநாயக கட்சி 16 தசம் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)