பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது
கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது – ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
தேர்தல் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று வாக்கு என்னும் பணியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 121 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.
இதனை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நகர தலைவர் அருள்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
(Visited 10 times, 1 visits today)





