தமிழக மக்கள் இந்த மண்ணில் படும் துயரங்களுக்கு காங்கிரஸே காரணம் – சீமான் ஆதங்கம்
“தமிழ் மக்கள் இந்த மண்ணில் படும் அனைத்து துயரங்களுக்கும் காங்கிரஸே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முதலில் இந்தியை திணித்து தனது தாய் மொழியாம் தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும். தாலிக்கு தங்கம் கொடுப்பார்கள். பின்னர் மதுவை குடிக்கவைத்து அவர்களே தாலியை அறுப்பார்கள்.
ரேஷனில் இலவசமாக அரிசி போடுகிறார்கள். அதை எத்தனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். மக்கள் விநியோகத்துக்கு வரும்போது தரம் குறைவாக இருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரில் இன்னும் தண்ணீர் தேங்கி கொண்டுதான் இருக்கிறது. மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு வெள்ள நிவாரணம் கொடுத்ததெல்லாம் ஆட்சி இல்லை. எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அதை வழிந்தோட செய்வதுதான் ஆட்சி” என்றார்.





