அமெரிக்காவில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை – ICE முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவு!
அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களால் மினியாபொலிஸில் (Minneapolis) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ICE முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 4500 முகவர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவர்கள் மற்றும் தலைமைப் பணியாளர்கள் பற்றிய தகவல்களுடன், நாடுகடத்தல்கள், காவலில் உள்ள இறப்புகள் மற்றும் பிற “துஷ்பிரயோகங்கள்” உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய தகவல்களும் வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ICE பட்டியலின் நிறுவனர் டொமினிக் ஸ்கின்னர் (Dominick Skinner) இந்த துப்பாக்கிச் சூடு அமெரிக்க அரசாங்கத்திற்குள் பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க அரசாங்கத்திற்குள் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கான அறிகுறி இது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த கசிவானது ICE முகவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





