அ.தி.மு.கவுடன் சங்கமம்: டி.டி.வி. தினகரனை தூதனுப்புகிறார் ஓ.பி.எஸ்.!
அ.தி.மு.கவுடன் இணைந்து செயல்பட தயாராகவே இருக்கின்றேன். இதற்குரிய நடவடிக்கையை டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் OPS தெரிவித்தார்.
தமிழக சட்ட மன்ற தேர்தர் தொடர்பில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகின்றார்.
அவரது ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளின் இணைந்துவருகின்றனர்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றார்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின்போது,
“ சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.” என்று குறிப்பிட்டார்.
தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன்.
சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது.
அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும்.” – எனவும் ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு இணங்குவாரா என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன்.
எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.” என ஓ. பன்னீர்செல்வம் மேலும் குறிப்பிட்டார்.





