நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலிய சென்ற விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு
நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சேர்ச்சில் இருந்து சிட்னி நகருக்கு சென்று கொண்டிருந்த NZ221 என்ற எயார் நியூசிலாந்து விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மன் கடல் மீது விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஹைட்ராலிக் (Hydraulic) மற்றும் ஸ்டீயரிங் (Steering) அமைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாக எயார் நியூசிலாந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட போதிலும், விமானிகள் திறமையாகச் செயற்பட்டு, விமானத்தை சிட்னியில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் காலை 9 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை அடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து எயார் நியூசிலாந்து நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு மற்றும் இடர்காப்பு அதிகாரி நாதன் மெக்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றினை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் எமது நிறுவன பொறியிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக, குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் பெரும் பதற்றத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.





