புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை : 08 டிரில்லியனை தாண்டிய மூலதனம்!

இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல் இன்று பதிவாகியுள்ளது.
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த சந்தை மூலதனம் 8 டிரில்லியன் என்ற அளவைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதே நேரத்தில், அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகமாகும்.
S&P SL20 குறியீடும் பகலில் 22.07 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டின் அதிகபட்ச அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது.
இதேவேளை இன்றைய தினத்தில் 5.74 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவாகியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)