உலகில் சொத்து வாங்க முடியாத நகரமாக கொழும்பு தெரிவு!
உலகில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கடினமான அல்லது வாங்க முடியாத நகரமாக கொழும்பு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோவின் சமீபத்திய சொத்து விலைக் குறியீட்டில் இந்நகரம் இடம்பிடித்துள்ளது.
கொழும்பில் விலை-வருமான விகிதம் 55.3 சதவீதம் என்று தரவு காட்டுகிறது, அதாவது சராசரி சொத்தின் விலை சராசரி ஆண்டு வருமானத்தை விட 55 மடங்கு அதிகமாகும்.
மேலும், சராசரி குடியிருப்பாளரின் அடமானச் சுமை திகைப்பூட்டும் வகையில் உள்ளது, அடமானக் கொடுப்பனவுகள் ஆண்டு வருமானத்தில் 774% க்கு சமம்.
நகரத்தின் மலிவு விலை குறியீடு 0.1 ஆக உள்ளது, இது உள்ளூர்வாசிகள் சொத்து வாங்குவதில் உள்ள மிகுந்த சிரமத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த தரவரிசையில், காத்மாண்டு (நேபாளம்), மணிலா (பிலிப்பைன்ஸ்), ஜியாமென் (சீனா), தைபே (தைவான்), ஷாங்காய் (சீனா), ஹாங்காங் (சீனா), பெய்ஜிங் (சீனா), புனோம் பென் (கம்போடியா) மற்றும் மும்பை (இந்தியா) உள்ளிட்ட அதிக சொத்து விலைகளுக்கு பெயர் பெற்ற பிற ஆசிய நகரங்களை விட கொழும்பு முன்னிலை வகிக்கிறது.





