வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றம்

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொக்கைன் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதிவாதியான நைஜீரிய பிரஜை 245 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)