அமெரிக்காவில் இடிந்து விழுந்த பால்ட்டிமோர் பாலம் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் இடிந்து விழுந்த பால்ட்டிமோர் பாலத்தைத் அதிகாரிகள் தூள் தூளாக வெடிக்க வைத்துள்ளனர்.
பால்ட்டிமோர் நகரில் இடிந்துவிழுந்த பிரான்சிஸ் ஸ்காட் கீ (Francis Scott key) பாலத்தை அமெரிக்க அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடித்துள்ளனர்.
கடந்த மாரச் 26ஆம் திகதி டாலி சரக்குக் கப்பல் மோதியதில் அந்தப் பாலம் இடிந்துவிழுந்தது. 6 கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்தனர்.
வெடிகுண்டை வைத்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கும்போது, பாலம் சிறிய பகுதிகளாக உடையும்.
அப்போது மீட்புக்குழுவினர் பாரந்தூக்கியைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்ற முடியும் என்றனர் அமெரிக்க ராணுவப் படையின் பொறியாளர்கள்.
அந்த நடவடிக்கையை நேற்று முன்தினம் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வானிலை காரணமாக அந்த நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இடிந்துவிழுந்த பாலத்தை மீண்டும் கட்ட 1.7 பில்லியன் டொலர் முதல் 1.9 பில்லியன் டொலர் வரை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலம் 2028ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.