தமிழ்நாடு

கோவை – கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சி… பார்வையாளர்கள் ஆச்சரியம்!

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் துப்பாக்கிகள், வெடி குண்டுகள், ராணுவ உடைகள் உட்பட பல்வேறு மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு நவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் இந்த மாதிரி கருவிகளை எவ்வாறு கையாளுவது அதன் பயன்பாடுகள் என்னவென்று கற்று தரப்படுகின்றன.

மேலும் போர் ஒத்திகைகளும் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பொது மக்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!