தமிழ்நாடு

கோவை – நொய்யலாறு தடுப்பணையிலிருந்து நுரைதள்ளியபடி வெளியேறும் தண்ணீரால் எழுந்துள்ள அச்சம்..!

ரசாயன கழிவுகளுடன் நொய்யலாற்று தடுப்பணையில் இருந்து நுரைதள்ளியபடி வெளுயேறும் தண்ணீரால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்புடத்தக்கது.

தற்பொழுது நொய்யலாற்று நீர்வழி தடங்களை தூற்வாராததும், நீர்வழித்தட வழிதடங்களின் அருகில் செயல்பட்டுவரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கல் வழியாக நொய்யலாற்றில் கலக்கும் அசுத்த நீராலும் தற்பொழுது காளவாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுறையுடன் வெளியேறிவருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்