செய்தி விளையாட்டு

Club World Cup – அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெஸ்ஸியின் இன்டர் மியாமி

சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21வது உலககோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று உள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

இன்று ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி – பால்மீராஸ் அணிகள் மோதின.

இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இதே பிரிவில் போர்டோ -அல்-அஹ்லி மோதிய ஆட்டமும் 4-4 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.

பால்மிராஸ், இண்டர்மியாமி அணிகள் 1 வெற்றி, 2 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடங்களை பிடித்து 2வது சுற்றுக்கு முன்னேறின.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி