காங்கோவில் (Congo) போட்டி சமூகங்களுக்கு இடையே வெடித்த மோதல் – 14 பேர் பலி!
காங்கோவில் (Congo) உள்ள கிராமமொன்றில் போட்டி சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
தலைநகர் கின்ஷாசாவிலிருந்து (Kinshasa) வடகிழக்கே 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவில் உள்ள நகானா (Nkana) கிராமத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் 5 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்கோவில் டெக்கே (Teke) மற்றும் யாக்கா (Yaka) சமூகங்களுக்கு இடையே நில உரிமை தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
தாக்குதல் நடத்தியவர்கள் யாக்கா (Yaka) மக்களின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் மொபோண்டோ (Mobondo) போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவம் கூறியுள்ளது.





