இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே மோதல்

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றையதினம் வன்முறை உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!