மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துங்கள் -நாமல் ராஜபக்ஷ!

மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் இன்று (22.06) முன்னிலையாகியிருந்த அவர், ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்படி கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மறுசீரமைக்கும் நிறுவனங்கள் எவை? மறுசீரமைப்புக்கான காரணங்கள் என்ன? அந்த நிறுவனங்கள் இலாபமிட்டும் நிறுவனங்கள் என்றால் அதனை ஏன் மறுசீரமைப்பு செய்கிறீர்கள்? என்பதை நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்திலும், மக்களுக்கும் விசேடமாக அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
(Visited 18 times, 1 visits today)