சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் உட்பட 177 பேருக்கு குடியுரிமை
சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் உட்பட 177 பேருக்கு அந்த நாட்டின் குடியுரிமை நேற்று வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் குடியுரிமை விழா நடத்தப்படும். அப்போது அந்த நாட்டில் வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்த நிலையில், நடந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் சுதன் வின்சென்ட் உள்பட 177 பேருக்கு சிங்கப்பூரின் குடியுரிமை சான்றிதழை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணன்,‘‘ ஒவ்வொருவருக்கும் தனித்துவம்வாய்ந்த திறமைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நமது சமூகத்துக்குப் பங்களிக்க வழிவகைகளை ஆராய வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு 23,500 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)