உலகம் செய்தி

எண்ணெய் சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கை மீட்பு – வெனிசுலாவில் புதிய திருப்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் பணிப்பாளர்  ஜோன் ராட்க்ளிஃப் வியாழக்கிழமை கராகஸில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்தார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், வெனிசுலா இனி அமெரிக்காவின் எதிரிகளுக்கு பாதுகாப்பான தங்குமிடமாக இருக்கக்கூடாது என்பதையும் இரு தரப்பும் விவாதித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் யூனியன் உரையை நிகழ்த்திய அதே நாளில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் முன்னாள் ஜனாதிபதி மதுரோவின் கொள்கைகளிலிருந்து விலகி, அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் எண்ணெய் துறையில் சீர்திருத்தங்களை அறிவித்தாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!