இலங்கை

சோழன் உலக சாதனை படைத்த பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி

மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா. பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க தன் தொடர் முயற்சியினால் மனித உடலின் 423 உள் உறுப்புகளை படத்தில் அடையாளம் காட்டியவாறு 4 நிமிடங்களில் மனப் பாடமாக ஒப்புவித்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதற்கான உலக சாதனை நிகழ்வு 16-08-2023 அன்று பொகவந்தலாவை ஹேலிரோசரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த சோழன் உலக சாதனை முயற்சியை அந்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு.ஸ்ரீநாகவானி ராஜா நடுவராக நேரில் கண்காணித்து உறுதி செய்தார் .சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றுதலும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் உப தலைவர் ஸ்ரீநாகவானி ராஜா, வித்தியாலத்தின் அதிபர் பி.குமரேசன். உப அதிபர் கிருபாகரன். பொகவந்தலாவ செலான் வங்கியின் முகாமையாளர், கேயார் லங்கா நிறுவனத்தின் இனைப்பாளர் இளையராஜா ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்