இந்தியா

புதுவித அரசியல் ஆட்டத்தில் சின்னம்மா?

” தமிழக சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம்.” என்று முன்னாள் முதல்வர் ஜெயலாலிதாவின் நெருங்கிய சகாவான சசிகலா Sasikala, தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று (03) அஞ்சலி செலுத்தினார்.

துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என இதன்போது அவரது ஆதரவாளர்கள் உறுதி எடுத்தனர்.

இது பற்றி சசிகலாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

“எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை.

சட்டசபைத் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.” என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய எழுப்பட்ட கேள்விக்கு,

“ ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்.” என பதிலளித்தார்.

அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை அம்மா எனவும், அவரது மறைவின் பின்னர் சசிகலாவை சின்னம்மா எனவும் விளித்தனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!