பிலிப்பைன்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன உளவாளி

உளவு சட்டம், தரவு தனியுரிமைச் சட்டம் மற்றும் சைபர் குற்றத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக ஒரு சீன நாட்டவரைக் கைது செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மணிலாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பிரதான அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் கண்காணிப்பு உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சந்தேக நபர் மக்காவ்வில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்தார், அது அவரை தக் ஹோய் லாவோ என்று அடையாளம் காட்டியது.
சந்தேக நபரின் வசம் இருந்த சாதனங்களில், மொபைல் போன் தொடர்புகளை இடைமறிக்கவும், இருப்பிடத் தரவைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் சாதனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மணிலாவில் உள்ள தேர்தல் அமைப்பின் முக்கிய தலைமையகத்திலிருந்து தேர்தல் தரவுகள் அவற்றில் இல்லை என்று ஊடக அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.