ஆறு மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி குழு
ஆறு மாத காலம் Tiangong விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த சீனாவின் 3 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.
அவர்களை ஏற்றியிருந்த Shenzhou விண்கலம், மங்கோலியாவின் உட்புறப் பகுதியில் Dongfeng தளத்தில் தரையிறங்கியது.
Ye Guangfu, Li Cong, Li Guangsu ஆகிய மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் Xi Jinping தலைமையில் தனது விண்வெளிக் கனவை நனவாக்கும் முயற்சியில் சீனா அதி தீவிரமாக உள்ளது.
அதற்கு முன்னோட்டமாகத் தான் Tiangong விண்வெளி நிலையைத்தை அமைத்து, ஒவ்வொரு மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மூவரடங்கிய விண்வெளி வீரர்கள் குழுவை சீனா சுழல் முறையில் அனுப்பி வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் நிலாவுக்கு ஒரு குழுவை அனுப்பும் திட்டத்திலிருக்கும் பெய்ஜிங், நிலவின் மேற்பரப்பில் ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.