தைவானின் கின்மென் தீவுக்கூட்டத்திற்கு அப்பால் சீன படையினர் ரோந்து : மீனவர்களுக்கு பாதிப்பு!
தைவானின் கின்மென் தீவுக்கூட்டத்தின் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சீனா ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனக் கடலோரக் காவல்படையின் ஃபுஜியன் பிரிவு, கின்மெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜியாமென் நகரின் தெற்குக் கரையோரப் பகுதியை கடல்சார் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சீன கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் குறித்த நடவடிக்கையால் இருநாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தைவான் மற்றும் சீனாவைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கமாக அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பல்களில் இருந்து வரும் சத்தம் மற்றும் ஒலி மாசு மீன்பிடி நடவடிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ரோந்து நடவடிக்கைகள் அந்த பகுதியில் மீனவர்களின் படகு சேதமடைவதற்கும், மீனவர்கள் உயிரிழப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.