சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ஆக்கிரமிப்பு கடற்பரப்பில் நுழைந்த சீன கப்பல்!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள பிலிப்பைன்ஸ் ஆக்கிரமிப்புத் தீவின் ஆழமற்ற நீரில் சீன கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸ் படைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மோசமான காலநிலை காரணமாகவே கரையொதுங்கியதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பணியாளர்களிடையே காயங்கள் ஏற்பட்டதா அல்லது கப்பல் சேதமடைந்ததா என்பது உட்பட வேறு எந்த விவரங்களும் உடனடியாக கிடைக்கவில்லை என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





