ஜப்பானுக்கான சுற்றுலா விசா டிக்கெட்டுகளை இரத்து செய்த சீனர்கள்!
ஜப்பானுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சீனா தங்கள் நாட்டு மக்களிடம் வலியுறுத்திய நிலையில் ஏறக்குறைய 491,000 டிக்கெட்டுகள் இரத்த செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் ரத்துகள் புதிய முன்பதிவுகளை விட 27 மடங்கு அதிகமாக இருந்ததாக சுயாதீன ஆய்வாளர் லி ஹான்மிங் ( Li Hanming) தெரிவித்துள்ளார்.
ஷாங்காய்-டோக்கியோ மற்றும் ஷாங்காய்-ஒசாகா பகுதிகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 பரவலின் ஆரம்ப காலத்தில் இவ்வாறு விமான முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது பெருந்தொகையான முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தைவான் ஜலசந்தியில் மோதல் ஏற்பட்டால், டோக்கியோ தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தலாம் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி (anae Takaichi) அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சீனா தன்னாட்டு குடிமக்களிடம் கேட்டுக்கொண்டது.
இதற்கமைய குடிமக்கள் தங்கள் பயணங்களை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




