சீனாவின் காதலனுக்காக எடை குறைத்து உயிரிழந்த சிறுமி
																																		சீனாவின் Guangdong மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்த இளைஞன் அன்பைப் பெற தீவிரமான முயற்சியை மேற்கொண்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெறறுள்ளது.
குறித்த பெண் காதலித்த நபர் அவரைவிட மெலிந்து காணப்பட்டுள்ளார். இதனால் காதலனுக்காக 15 வயதான அந்தப் பெண் அவரது எடையை 25 கிலோகிராம் வரை குறைத்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் Anorexia நோய்க்குள்ளான அந்த பெண் 20 நாட்களுக்கு மேலாக நினைவிழந்த நிலையில் இருந்து உயிரிழந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவமனை படுக்கையில் அசையாமல் கிடந்ததைக் காணமுடிந்தது.
வெறும் தண்ணீரை மட்டும் அருந்திய அவருக்கு உதவ அவரது பெற்றோர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை
இறுதியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தப்பியோட முயற்சி செய்ததோடு தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். உடல் எடையைக் குறைக்கத் தீவிரமான முயற்சியை மேற்கொண்ட அவர் இந்த நிலைக்கு ஆளானார். இறுதியில் அவர் உயிரிழந்தார்.
        



                        
                            
