ஐரோப்பா

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் லண்டனில் அமைக்கப்படும் சீன தூதரகம்!

லண்டனில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்திற்கு உள்துறை அலுவலகம் மற்றும் வெளியுறவு அலுவலகம் ஆகியவை எந்த முறையான ஆட்சேபனைகளையும் எழுப்பாது என தி டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டிசம்பர் பத்தாம் திகதிக்குள் இதற்கான பதில்களை வழங்க வேண்டும் என பாதுகாப்பு சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உளவு பார்ப்பது குறித்த தொடர்ச்சியான கவலைகள் மற்றும் இங்கிலாந்து தேசிய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து MI5 எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும்  இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!