வடகொரியாவுக்கு சென்ற சீன மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள்!
சீன மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கான விஜயத்தை இன்று (26) மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சொய்கு தலைமையிலான குழு ஏற்கனவே வடகொரியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொரியப் போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வடகொரியாவின் பியாங்யாங்கில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவைக் காண ரஷ்ய மற்றும் சீன பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
இதற்கிடையே இந்த நாடுகளின் உறவு பலம் பெரும் பட்சத்தில் அது உக்ரைன் – ரஷ்ய போரில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பதையும் நிபுணர்கள் உண்ணிப்பாக அவதானித்து வருகின்றனர்.





