திபெத்தில் உலகிலேயே மிக பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டைக் கட்டும் சீனா
உலகிலேயே ஆகப் பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டைச் சீனா கட்ட இருக்கிறது.இந்த அணைக்கட்டு திபெத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு இந்தியா மற்றும் பங்ளாதேஷைச் சேர்ந்த மில்லியன்கணக்கானோரைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அணைக்கட்டுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க சீன அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
யார்லுங் சாங்போ ஆற்றில் இந்த நீர் மின் நிலைய அணைக்கட்டு கட்டப்படும் என்றும் ஆண்டுக்கு அது மணிக்கு 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடும் என்று சீனாவின் மின் ஆலை கட்டுமானத்துறை தெரிவித்தது.
தற்போது சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள உலகின் ஆகப் பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டு தயாரிக்கும் மின்சாரத்தைவிட இது மும்மடங்கும் அதிகம்.
(Visited 1 times, 1 visits today)