மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய சீனா
மில்லியன் கணக்கான பிரித்தானிய வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவின் ஜனநாயக செயற்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் நகல்களை சீனா அணுகியதாக கூறப்படுகிறது.
சைபர் தாக்குதலின் போது, 2014 மற்றும் 2022 க்கு இடையில் பிரித்தானியாவில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய கோப்புகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





