இராணுவப் பலத்தைக் காட்டும் சீனா – புட்டின் பங்கேற்பில் அணிவகுப்பு

சீனா, தனது நவீன ராணுவ சக்தியை வெளிக்காட்டும் வகையில், மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த அணிவகுப்பு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நினைவாக வெற்றி தினம் என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெறும் நிகழ்வில், பல்லாயிரம் படைவீரர்கள், நூற்றுக்கணக்கான ராணுவ சாதனங்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கவுள்ளன.
இதில் முன்னதாக வெளியில் காணப்படாத சில நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களும் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணிவகுப்பின் மூலம், சமூக அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், சீனாவின் போர்திறனை உலகிற்கு வெளிக்காட்டும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், இது சர்வதேச ரீதியில் முக்கிய அரசியல் கண்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.