வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த சீனா

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 7 அரிய வகை தனிமங்களை (earths) ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.
அமெரிக்காவின் 11 பாகாப்பு நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களின் பட்டியலில் சீனா இணைத்துள்ளது.
6 அமெரிக்க நிறுவனங்களுக்கான இறக்குமதி அனுமதியைப் பெய்ச்சிங் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய வரிக்கு எதிராக உலக வர்த்தக நிறுவனத்தின் பூசல் தீர்க்கும் கட்டமைப்பிடம் சீனா முறைப்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி உலக வர்த்தக நிறுவன விதிகளைக் கடுமையாக மீறியிருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
நிறுவனத்தின் உரிமைகளையும், அதன் உறுப்பினர்களின் நலன்களையும் அமெரிக்காவின் செயல்பாடு கடுமையாகச் சேதப்படுத்துவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை உலகப் பொருளாதார நிலைத்தன்மைக்கும், வர்த்தக ஒழுங்குக்கும் அபாயம் விளைவிக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.