உலகின் நீண்ட வணிக விமானப் பாதையை கடந்து சாதனை படைத்த சீனா!
உலகின் மிக நீண்ட வணிக விமானப் பாதையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines ) 29 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.
டிசம்பர் 4 ஆம் திகதி ஷாங்காயிலிருந்து புறப்பட்ட விமானம், 12,400 மைல்களை குறிப்பிட்ட நேரத்தில் கடத்துள்ளது.
எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர் சுழற்சிக்காக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நிறுத்தப்பட்ட பிறகு, மீண்டும் அர்ஜென்டினாவின் (Argentina) பியூனஸ் அயர்ஸை (Buenos Aires) வந்தடைந்துள்ளது.
316 இருக்கைகள் கொண்ட போயிங் 777-300ER மூலம் இயக்கப்படும் இந்தப் புதிய விமானம், வாரத்திற்கு இரண்டு முறை இயங்கும்.
அதேநேரம் ஷாங்காயை முக்கிய தென் அமெரிக்க நகரங்களுடன் இணைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




