HMPV வைரஸ் தொடர்பில் சீனா வெளிப்படையாக இருக்க வேண்டும் – உலக நாடுகள் வலியுறுத்து!
HMPV வைரஸ் அமெரிக்காவில் பரவி வருவதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுவதால், மேற்கத்திய வல்லுநர்கள் வெளிப்படையாக சீனாவின் மருத்துவமனைகளில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸாவின் வெடிப்பு பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பெய்ஜிங் 2024 இல் இருந்ததை விட சுவாசக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்படும் படங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொற்று நோய்களில் நிபுணரான ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர். சஞ்சய சேனாநாயக்க, “இந்த வெடிப்பு பற்றிய தரவுகளை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வது சீனாவிற்கு இன்றியமையாதது” என்று கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)