ஆசியா

குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில் ஈரான், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர்களை அமைச்சர்களைச் சந்தித்த சீனா

மத்திய கிழக்கில் போர் நிலவும் வேளையிலும் ராணுவத்துக்கான செலவுகளை அதிகரிக்கப்போவதாக நேட்டோ நாடுகள் கூறியுள்ள நிலையில் சீனா ஈரான், ர‌ஷ்யா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளது.

பெய்ஜிங், மேற்கத்திய வல்லரசு நாடுகளின் குழுமத்துக்கு எதிராக 10 உறுப்பு நாடுகள் அடங்கிய ‌‌‌ஷாங்காய் கூட்டுறவு அமைப்பை முன்னிறுத்த நீண்டகாலமாக முயன்று வந்தது.அதன் வழி அரசியல், பாதுகாப்பு, வர்த்தக, அறிவியல் ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்த 12 நாள் போர் நிறுத்தப்பட்டதை அடுத்து சீனாவின் உயர் தற்காப்பு அதிகாரிகள் ஜிங்டாவ் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

நேட்டோ நாடுகளின் உச்சநிலைச் சந்திப்பு முடிந்த அடுத்த நாளே ஜிங்டாவ் கூட்டம் நடத்தப்படுகிறது. நேட்டோ கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைத் திருப்திப்படுத்தும் வகையில் உறுப்பு நாடுகள் தற்காப்புச் செலவினங்களை அதிகரிக்க ஒப்புக்கொண்டன.

சீனக் கடற்படையின் தளமாக விளங்கும் ஜிங்டாவ்வில் நடந்த கூட்டத்தைச் சீனத் தற்காப்பு அமைச்சர் டொங் ஜூன், கலக்கமும் நிச்சயமற்ற சூழலும் நிலவும் உலகிற்கு ஒரு தீர்வாக முன்வைத்தார்.தன்னைப் பேணித்தனப் போக்கு போன்றவை அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்ட திரு டொங், ர‌ஷ்யா, ஈரான், பாகிஸ்தான், பெலரஸ் ஆகிய பல நாட்டுத் தற்காப்பு அமைச்சர்களை வரவேற்றார்.

அமைதியான சூழலை உருவாக்க உறுப்பு நாடுகள் துரிதமாக ஒன்றிணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்று திரு டோங் கேட்டுக்கொண்டார்.கூட்டத்துக்கு இடையே ர‌ஷ்யத் தற்காப்பு அமைச்சர் அண்ட்ரெய் பெலுசோவ் திரு டோங்கைச் சந்தித்தார். அவர் இருநாடுகளுக்கும் இடையிலான உன்னத உறவை மெச்சினார்.“நட்பாகப் பழகும் இருநாடுகளின் வளர்ச்சி அனைத்து திசைகளிலும் அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரேனுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான போரில் சீனா நடுநிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டது. இருப்பினும் நெருங்கிய தொடர்பு பொருளியல், அரசதந்திர ஆதரவை ர‌ஷ்யாவுக்குக் கொடுத்திருப்பதாக மேற்கத்திய அரசாங்கங்கள் குறைகூறின.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்