ரஷ்யாவிற்கு, சீனா ஆயுத உதவிகளை வழங்காது என்பதை மீளுறுதி செய்துள்ளது!
உக்ரைனில் போரிட ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதியை சீனா புதுப்பித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (19) சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சீன நிறுவனங்கள் உக்ரைனில் அதன் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கு ரஷ்யா பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குவது பற்றி எங்களுக்கு தொடர்ந்து கவலைகள் உள்ளன என்றும் பிளிங்கன் கூறினார்.
இதுகுறித்து சீன அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பிளிங்கன் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)