பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்திய சீனா
சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும்(ICBM) ஏவுகணையை இன்று சோதனை செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சீன ராணுவம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)